எமது பாடசாலையின் வரலாறு
கோணசர் குடிகொண்டு அருள் பாலிக்கும் திருகோணமலையின் தெற்கே வயல் நிலம் சூழ மகாவலி நீர் எழில் சேர்க்க பொலிவுடன் விளங்கும் கிளிவெட்டிக் கிராமம், பல நூற்றாண்டு தெண்மை கொண்டது. நீலாப்பளை, மேங்காமம், சம்பூர் போன்ற தொன்மை கிராமங்களில் இருந்து விவசாயம், விலங்கு வேளாண்மை தொழில்களுக்காக இக் கிராமத்தை நாடி வந்த மக்கள் காலப்போக்கில் நிரந்தரமாகவே தங்கி வசிக்கத் தொடங்கியதில் இருந்தே இங்கு ஓர் குடியிருப்பு தோன்றியது. அதனைத் தொடர்ந்து இக்கிராமத்திற்கான தேவைகள் அதிகரித்த நிலையில் பிரிட்டிஷ்ன் ஐந்தாவது ஜோர்ஜ் மன்னர் காலத்தில் கல்வியினை வழங்கும் நோக்கோடு 1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த கதிர்காமர் புண்ணியமூர்த்தி என்பவரால் ஆரம்ப பாடசாலையாக இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை அ.த.க பாடசாலை என்ற பெயரில் ஐந்து வகுப்புகளைக் கொண்டிருந்தது. இங்கு கிடைத்த தகவலின் படி அதிபர்களாக
| 1915- 1924 | திரு.கனகசபை | திருகோணமலை |
| 1925-1937 | திரு.ப.சுப்பிரமணியம் | திருகோணமலை |
| திருமதி.சுப்பிரமணியம் | திருகோணமலை | |
| 1938-1940 | திரு.வீரசிங்கம் | ஆரையம்பதி |
| திருமதி.முத்தம்மா | மூதூர் | |
| 1941-1943 | திரு.தில்லையம்பலம் | மட்டக்களப்பு |
| 1944 | திரு.சின்னத்தம்பி |
இப்பாடசாலையை திரு.வே.சுப்பிரமணியம் என்பவர் கல்வி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எடுத்த முயற்சியின் பயனாக திரு.வீரசிங்கம் அதிபரின் காலத்தில் ஆறாம் தர வகுப்பிற்கு தரம் உயர்த்தப்பட்டது . அதன் பின்னர் அதிபர்களாக
| திரு.கதிரமலை | ஒந்தாச்சிமடம் |
| திருமதி.கிருஷ்ணபிள்ளை | சின்னாச்சி |
| திரு.வினாசித்தம்பி | கல்லாறு |
| திரு.கதிர்காமத்தம்பி | மூதூர் |
| திரு.செல்லையாகுருஷ் | மூதூர் |
இப்ப பாடசாலை திரு.அருணாச்சலம் தங்கத்துரை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியாலும், அரச தொடர்புகளாலும் 1976 ஆம் ஆண்டு கிளிவெட்டி மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சேவையாற்றிய அதிபர்களின் விபரம்
| 1975 - 1976 | திரு.க.சிவக்கொழுந்து | மல்லிகைத் தீவு |
| 1976 1977 | திரு.கைடி பொன்கலன் | திருகோணமலை |
| 1977 - 1982 | திரு.க.தங்கராசா | ஆலங்கேணி |
| 1983 1986 | திரு.ஆ.குணராஜரெட்ணம் | பள்ளிக்குடியிருப்பு |
| 1987 - 2001 | திரு.வீ.பாக்கியதுரை | கங்குவேலி |
| 2001 - 2006 | திரு.பா.தேவராசா | கிளிவெட்டி |
இதன் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதி அம்மணி.சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க காலத்தில் 2004 ஆண்டு நவோதயாப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் அதிபர்களாக
| 2001-2006 | திரு.பா.தேவராசா | கிளிவெட்டி |
| 2007-2010 | திரு.க.பேரின்பநாதன் | சம்பூர் |
| 2018- இன்று வரை | திரு.பா.கோணேஸ்வரராசா | தங்கநகர் |
கடமையாற்றுகின்றார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு பல சாதனைகள் படைத்துள்ளது. அத்துடன் கடந்த 2021 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் மாவட்ட மட்ட முதலாம் நிலையையும் எமது பாடசாலை மாணவி பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்தார். மேலும் இப்பாடசாலையானது. பல வைத்தியர்களையும், பொறியியலாள்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், அதிபர்களையும், ஆசிரியர்களையும் மற்றும் இன்னும் பல உயர் அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளது. இன்றும் உயர்தரம் உள்ள சாதனைகளைப் படைக்கும் உயர்பாடசாலையாக இப்பகுதியில் மிளிர்கின்றது.






