கிளிவெட்டி மகா வித்தியாலயம்

எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது

1696254035261.jpg
1696507657089_thumb.jpg

பிரதி அதிபர் செய்தி

திருமதி.சு.விக்டர் சுஜா,

1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எமது பாடசலையானது இன்று வரை பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றது. இந்த அடிப்படையில் தொழிநுட்ப கல்வியானது உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்திய வேளை இன்று எமது தாய்த் திருநாட்டிலும் கல்வியில் பல மாற்றங்கள் இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  எனவே அதற்கேற்ப தற்கால ஆசிரியரியர்கள் தங்களைத் தயார்படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.அதிலும் குறிப்பாக தொழிநுட்ப சாதனங்களை கையாளுதல், அவற்றை பிரயோகித்தல் போன்றன இன்றைய காலகட்டத்தில் பெரும் சவாலாகக் காணப்படுகின்றன. இச்சவால்களை வெற்றி கொண்டு வளர்ந்து வரும் சந்ததியினருக்கு நிறைவான கல்வியை வழங்க வேண்டியது தற்கால ஆசிரியர்களின் மிகுந்த பொறுப்பாகும். 

இந்த அடிப்படையில் எமது பாடசாலைக்கு மிக அத்தியவசியமாகக் காணப்பட்ட இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு Cyber Lowatta Piyapath நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பல வழிமுறைகளில் உதவி வழங்கிய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அம்மணி.அகிலா கணகசூரியம் அவர்களுக்கும், மாகாணக் கல்வித் திணைக்கள தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவிக் கல்விப்பணிப்பாளர் ஜனாப்.இல்லியாஸ் முஷவ்பில் சேர் அவர்களுக்கும், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா.ஷினத்துல் முனவ்வறா நளீம் அவர்களுக்கும், மூதூர் வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவிக் கல்விப்பணிப்பாளர் ஜனாப்.எஸ்.ஹுஸைன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இதனை வடிவமைப்பதற்கு தொடர் பயிற்சிகளை எமது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய Schoolnet, Cyber lowatta Piyapath, LK Domain Registery, Vithusath Mehavara, Hithavathi ஆகிய நிறுவனங்களுக்கும் மேலும் எமது பாடசாலையின் இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு பூரணமாக ஒத்துழைப்பு வழங்கிய எமது பாடசாலையின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியர் ஜனாப்.எம்.எம்.ஜனூஸ் ஆசிரியர் அவர்களுக்கும் மிகச் சிரத்தையோடு இதனை வடிவமைத்த எமது பாடசாலை மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

திருமதி.சு.விக்டர் சுஜா,
பிரதி அதிபர்
தி/மூ/கிளிவெட்டி மகா வித்தியாலயம்.