நிகழ்வானது 16-09-2023 சனிக்கிழமை அன்று மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி
Mrs Z.M.M நளீம்(Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக
தி/மூ/கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப் பணிப்பாளரான செல்வி "அகிலா கனகசூரியம்" அவர்கள் வருகை தந்திருந்தார்..
மேலும் திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளரான திரு "தினகரன் ரவி"அவர்களும் கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் மற்றும் திருகோணமலை வடக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்..
பிரதம விருந்தினர் தனது சிறப்புரையில் இதனை விழாவாக ஒழுங்கமைத்தமைக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிவெட்டி மகா வித்தியாலத்தின் அதிபர் திரு P. கோணேஸ்வரராசா, ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குரிய சிற்றுண்டிகள். மதிய உணவு என்பன மூதூர் வலய சில பாடசாலை அதிபர்களினால் வழங்கப்பட்டதை நன்றியுடன் வலய கல்விப் பணிப்பாளரினால் நினைவு கூரப்பட்டது..






