2024 ஆம் ஆண்டுக்கான உலக ஆசிரியர் தினம் 09.10.2024 ஆம் ஆண்டு இன்று திங்கட்கிழமை எமது பாடசாலையில் அதிபர் பா.கோணேஸ்வரராசா அவர்களின் தலமையில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
முதலில் அதிபர், ஆசிரியர்கள் மாணவச் செல்வங்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு ஆராதனை மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அதிபர் ஆசிரியர்கள் மங்கள விளக்கேற்றி இருக்கைகளில் அமர்ந்தனர். சமய அனுஷ்டானங்களின் பின்னர் ஆசிரியர்களால் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இன்றைய தினம் ஆசிரியர்களை மகிழ்விக்க மாணவர்கள் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். ஆசிரியர்களுக்கும் விசேட நிகழ்ச்சிகள் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படடு அரங்கேறின. பின்னர் எமது ஆசிரியர் குழாத்துக்கு பாடசாலையின் பிரதி அதிபர் அம்மணி.சு.விக்டர் சுஜா அவர்களால் பகல் போசன விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வு சிறப்புற அமைய ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பெற்றார்கள்,பழைய மாணவர்கள் மற்றும் எமது பாடசாலை மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
அதிபர்.






